என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
- கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
- மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.
மதுரை
கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.
மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.
தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்