என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் உள்ள அம்பேத்கார் சிலையிடம் மனு கொடுத்த எச்.ராஜா.
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு; எச்.ராஜா குற்றச்சாட்டு
- பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு என எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார்.
- மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் தல்லா குளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்களை அம்பேத்கார்தான் தட்டிக்கேட்க வேண்டும். எனவே தான் அவரது சிலைக்கு மனு கொடுத்து உள்ளோம்.
திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் தி.மு.க.வுடன் திருமாவள வன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார். மத்திய அரசு பட்டியலின சமூகத் துக்கு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தா மல் அதனை தமிழக அரசு திருப்பி அனுப்பி மோசடி செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் சுசீந்திரன் உடனிருந்தார்.