என் மலர்
உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் பங்கேற்ற மாட்டுவண்டிகள்.
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
- மேலூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் பங்கேற்றது.
மேலூர்
மதுரை மாவட்டம் மே லூர் அருகே உள்ள பெரிய சூரக்குண்டு சின்ன டக்கி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சூரக்குண்டு விலக்கில் இருந்து அழகர் கோவில் ரோட்டில் போட்டி நடந்தது. பெரிய மாட்டு வண்டி வண்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளாய் 3 பந்தயங்கள் நடை பெற்றது.
மொத்தம் 38 வண்டிகள் பங்கேற்ற இப்போட்டியில் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசை இளங்கிப்பட்டி ஆண்டி அர்ச்சுனன் வண்டி யும், 2-வது பரிசை சூரக்குண்டு அருணாச்சலம் வண்டியும், 3-வது பரிசை சின்னமங்கலம் அழகு வண்டியும், 4-வது பரிசை புதுப்பட்டி சின்னச்சாமி வண்டியும் வென்றது.
சிறிய மாட்டு வண்டி பந்தயங்கள் 2 பிரிவுகளாக நடைபெற்றது. இது முதலில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை அனு மந்தன்பட்டி பிரவீன் குமார் வண்டியும், 2-ம் பரிசினை சாத்தமங்கலம் சர்ஜீத் பாண்டியராஜன் வண்டியும், 3-வது பரிசை சூரக்குண்டு அழகுபாண்டி வண்டியும் வென்றது.
அதனை தொடர்ந்து மற்றொரு சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இதில் முதல் பரிசினை அவனியாபுரம் முருகன் வண்டியும், 2-வது பரிசினை பாலுத்து சின்ன சாமி வண்டியும், 3-வது பரிசினை அய்யம பாளையம் வாடிப்பட்டி தங்கராஜன் வண்டியும், 4-ம் பரிசினை அய்யம பாளையம் காமாட்சி அம்மன் வண்டி வென்றது.