என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் மருது அழகுராஜா பேட்டியளித்த காட்சி. அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில செயலாளர் ராஜ் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புரத்தினம் உள்பட பலர் உள்ளனர்.
தலைமைக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி
- தலைமைக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பேட்டியளித்துள்ளார்.
- எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மதுரை
மதுரையில் அதிமுக ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அவர் இல்லாத அ.தி.மு.க.வை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் பலன் அளித்துள்ளது. அவர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பிரயோகித்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர். அதனை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியானவர் அல்ல. அ.தி.மு.க. பிளவால் தி.மு.க. தேர்தல்களில் வெல்லும் என்பது வரலாறு, உண்மையில் தி.மு.க.வுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி உதவி செய்து வருகிறார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேட்டியின் போது மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ,தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், பவுன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.