என் மலர்
உள்ளூர் செய்திகள்
காந்தி ெஜயந்தி கொண்டாட்டம்
- காந்தி ெஜயந்தி கொண்டாட்டத்தில் சிலைக்கு அமைச்சர்-கலெக்டர் மரியாதை செலுத்தினர்.
- மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
மதுரை
மகாத்மா காந்தி பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சி யகத்திலும் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரைக்கு வருகை தந்த காந்தி மேல மாசி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். அப்போதுதான் அவருக்கு அரை ஆடை அணிவது பற்றிய ஞானோ தயம் ஏற்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் மதுரை மேலமாசி வீதியில் காந்தி தங்கி இருந்த வீடு, நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் மூர்த்தி
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி இன்று காலை மேல மாசி வீதியில் உள்ள நினைவிடத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கதர் ஆடை விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்தி ராணி, மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.
மகாத்மா காந்தி கடந்த 1921-ம் ஆண்டு மதுரைக்கு ரெயில் மூலம் வந்தார். அதனை நினைவு கூறும் வகையில் ெரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் (காந்தி கார்னர்) அமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள படத்திற்கு கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடந்தது. இதனை கோட்ட ெரயில்வே மேலாளர் தொடங்கி வைத்தார்.
அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர், சில்வர் டப்பா க்கள் போன்றவற்றை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
மதுரை ெரயில் நிலைய முதல் நடைமேடை சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றிய நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை நேருயுவகேந்திரா சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க நுழைவு வாயில் முன்பு கலெக்டர் அனீஷ்சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.
இதையொட்டி தினந்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நேருயுவகேந்திரா மதுரை மண்டல இயக்குநர் செந்தில், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்றுநர்கள், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.