என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
- அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
- தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலை நிறுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலக வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி பேசுகை யில், மதுரை மாவட்டத்தில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிடில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.