search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

    • அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கோவிலுக்கு அழைத்துச் செல்லாததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    விளாங்குடி பொற்றாமரை நகரை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    வசந்திக்கு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மாதந்தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி சிவராத்திரியையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் விரதம் இருந்து வந்தார். அன்றைய தினம் இரவு கோவிலுக்கு சென்று அடுத்த நாள் காலை வரை விழித்திருந்து சிவராத்திரி வழிபாடு செய்ய முடிவு செய்தார்.

    எனவே வசந்தி கோவிலுக்கு செல்வதற்காக, வீட்டில் காத்துக்கொண்டிருந்தார். கணவர் பாண்டி கால தாமதமாக வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

    நான் கோவிலுக்கு வர முடியாது. நீ பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வா" என்று கணவர் கூறியுள்ளார். இது வசந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல நாளும் அதுவுமாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ப தற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நல்ல நாளில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறீர்களே, இது நியாயமா? என்று சத்தம் போட்டார்.

    பாண்டியும், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து வசந்தி படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார். அந்த அறையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று வசந்தியை மீ்ட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×