என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவன்- மனைவி கைது
- செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவன்- மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
- கார், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் உள்பட 18 லட்சம் ரூபாய் மதிப்பு உடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை
மதுரை திருப்பரங் குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளில் தங்க சங்கிலி, வழிப்பறி தொடர்ச்சியாக நடந்து வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷ னர் செந்தில்குமார் உத்தர விட்டார்.
இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவ ர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.
அப்போது திருப்பரங் குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் உள்பட 18 லட்சம் ரூபாய் மதிப்பு உடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கணவன்-மனைவி
இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஜனபுல்லா (வயது 45), மனைவி ராசியா (வயது 35), 17 வயது மகன் மற்றும் ஊமச்சிகுளம் சைனி மனைவி சித்ரா (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.