search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையில் நகை திருட்டு: தாய்- மகள் கைது
    X

    கைதான தாய்-மகள்.

    கடையில் நகை திருட்டு: தாய்- மகள் கைது

    • மாட்டுத்தாவணியில் ஜவுளி கடையில் நகை திருடிய தாய்- மகள் கைது செய்யப்பட்டனர்.
    • கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அங்கு ஊழியர்கள் நேற்று மாலை பணியில் இருந்தனர். அப்போது அங்கு ரூ.2.10 லட்சம் மதிப்புடைய 5 பவுன் நகை திருடு போனது.

    இதுகுறித்து மாட்டுத்தா வணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் பர்தா அணிந்த 2 பெண்கள், ஜவுளிக்கடையில் நகை திருடியது தெரியவந்தது. இருவரும் செக்கானூரணி, பன்னியான் ரோடு ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50), சரவணன் மனைவி பிரியதர்ஷினி (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தாய்-மகள் ஆவார்கள்.

    மாட்டுத்தாவணி ஜவுளிக்கடையில் கவரிங் செயினை வாங்கிய அவர்கள், ஒரிஜினல் நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் பார்வையிடுவது போல், கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×