என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்புகளுடன் நடனம் ஆடியவர் கைது
- பாம்புகளுடன் நடனம் ஆடியவர் கைது செய்யப்பட்டார்.
- நடன நிகழ்ச்சி உரிமையாளர் கொடுமுடி பாபு என்பவர் தப்பி ஓடி விட்டார்.
மதுரை
மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் ஆடி 18-ம் நாள் திருவிழாவில் நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இதில் பாம்புகளை வைத்து துன்புறுத்தி நடனம் ஆடிய அப்துல்லா (47) என்பவரை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நடன நிகழ்ச்சி உரிமையாளர் கொடுமுடி பாபு என்பவர் தப்பி ஓடி விட்டார்.
அவரை போலீசார் தேடி வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளை வைத்து நடனமாடும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று மதுரை மாவட்ட வன அலுவலர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
Next Story