என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/17/1967557-untitled-1.webp)
பொதுமக்களுக்கு முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் இனிப்பு வழங்கினார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
மதுரை
அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அ.தி.மு.க. நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓ.பி.எஸ்.அணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கண்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட துணைச் செய லாளர் சுசிலா பாண்டி, லதாபாண்டி, தொகுதி செயலாளர் ரகுராமன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், ஐ.டி.விங் திருப்பதி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.