என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/12/1896850-aadu-thiruttu.webp)
X
ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
By
மாலை மலர்12 Jun 2023 12:27 PM IST (Updated: 12 Jun 2023 2:13 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆவல்சூரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி லதா. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
மேலும் தங்களது வீட்டில் உள்ள காலி இடத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்த்து வந்த 6 ஆடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி சென்றுவிட்டனர்.
அதே போல் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் மர்ம நபர்கள் திருடிவிட்டனர்.
இது குறித்து லதா கொடுத்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.
Next Story
×
X