search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்சி மொழி கருத்தரங்கம்
    X

    ஆட்சி மொழி கருத்தரங்கம்

    • மதுரையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர் சண்முகதிருக்குமரன் மதுரையும் கலைஞரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது.

    அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் (பொ) சுசிலா வர வேற்றார்.

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் வானதி கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர்.

    மீனாட்சி கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத் துறைத் தலைவர் சந்திரா கலைஞர் நிகழ்த்தியச் செம்மொழிச் செயற் பாடுகள் எனும் தலைப்பி லும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் தட்சிணா மூர்த்தி மொழிப்பயிற்சி எனும் தலைப்பிலும், முனிச்சாலை, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சண்முகதிருக் குமரன் மதுரையும் கலைஞ ரும் எனும் தலைப்பிலும் பேசினர்.

    விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துமுருகன் திரைப்படங் களில் தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பிலும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கணினித்தமிழ் எனும் தலைப்பிலும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் சங்கீத் ராதா காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி சட்டம், வரலாறு எனும் தலைப்பி லும் பேசினர்.

    முடிவில் தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா நன்றி கூறினார்.

    Next Story
    ×