என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பங்குனி உத்திர விழா: பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு பங்குனி உத்திர விழா: பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/05/1861007-untitled-1.webp)
கிரிவலம் வந்த பக்தர்கள்.
பங்குனி உத்திர விழா: பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர விழாவில் பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- நாளை சூரசம்காரம் நடக்கிறது.
9-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தயார் நிலையில் உள்ள தேர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெரு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சுப்ரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில், தங்க குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பவுர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாைதயை வலம் வந்து வழிபாடு செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை (6-ந் தேதி) சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்கார லீலை நடைபெறுகிறது.
இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 7-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள பெரிய தேரோட்டம் நடைபெறும். தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதைகளில் சுற்றி வரும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.