என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ராகுல்காந்தி பிறந்த நாள்:சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்19 Jun 2022 2:23 PM IST
- ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
- தெற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் நடந்தது
திருப்பரங்குன்றம்,
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். பகுதி தலைவர் நாகேஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன். மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பூபதி பாண்டியன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், செல்வராஜ், சின்ன தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X