என் மலர்
உள்ளூர் செய்திகள்
பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது
- பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
- இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரை
மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-
மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.