என் மலர்
உள்ளூர் செய்திகள்
வைகை ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் பலி
- சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர் பலியானார்.
- இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 9-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நண்பர்கள் 5 பேருடன் திருவேடகம்-மேலக்கால் தடுப்பணை அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யங்காளை என்பவரின் மகன் அன்பரசன் ஆகியோர் சுழலில் சிக்கினர்.
இதுபற்றி தீயணைப்பு மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். இதில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி பலியான வினோத்குமார் உடல் இன்று காலை மிதந்தது. அவரது உடலை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மீட்டனர்.
பலியான வினோத்குமாருக்கும், நிறைமதி என்ற பெண்ணுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வினோத்குமார் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.