என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு ஊழியர் திடீர் சாவு
- மதுரையில் அரசு ஊழியர் திடீரென இறந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார்.
அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கருவூலத்துறை சர்வரில் கோளாறு இருப்பதால் பில் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து கருவூலத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஆனாலும் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரண மாக அவர் மாரடைப்பால் உயிர் இழக்க நேரிட்டது என்றனர்.