என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆசிட் குடித்து தற்கொலை
- அரசு பள்ளி ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் காந்திசாந்தகிரன் (வயது 58). இவர் கீழ உரப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி செந்தில்குமாரி அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் காந்திசாந்தகிரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதியவர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 71). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதில் மனம் உடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.