என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்
    X

    காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்

    • பி.பி.சி. ஆவணப்படத்தை தடுக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

    அவனியாபுரம்

    வில்லாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.பி.சி. ஆவண படத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் வெளியிட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் அந்த திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிகுமார் தலைமையில் சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா, மதன், தமிழ்செல்வி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீசாருக்கும் கைதான பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் காளிதாஸ்ல, பிரசார பிரிவு நிர்வாகி சடாச்சரம், அவனி ஆனந்த், மூர்த்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தில் மாவட்ட தலைவர் சசிகுமாரை, போலீசார் மற்றும் எதிர்தரப்பினர் தள்ளிவிட்டதாகவும் இதனால் அவர் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

    Next Story
    ×