என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மரம் விழுந்து அரசு பள்ளி கட்டிடம் சேதம்
By
மாலை மலர்16 Jun 2022 2:18 PM IST

- திருமங்கலம் அருகே மரம் விழுந்து அரசு பள்ளிகட்டிடம் சேதமடைந்துள்ளது.
- இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது.
ஒரு சில இடங்களில் மழைக்கு மரங்கள் கீழே விழுந்தன. திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இருந்த பழமையான மரம் நேற்று பெய்த மழைக்கு பெயர்ந்து பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது.
இரவு நேரம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. இதனால் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் எதும் ஏற்படவில்லை.
இன்று காலை இந்த கட்டிடத்தின் பின்புறமுள்ள பகுதியில் பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது. கட்டிடத்தின் மீது விழுந்த மரத்தை ஊழியர்கள் அகற்றினர்.
Next Story
×
X