search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி
    X

    தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி

    • வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
    • போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவோம். இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

    தவறினால் உங்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து விசாரித்த போது போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.

    இது தொடர்பாக வணிகவரி இணை ஆணையரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×