என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்-மதுரை ெரயிலுக்கு வரவேற்பு
- சோழவந்தானில் திண்டுக்கல்-மதுரை ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சோழவந்தான் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சோழவந்தான்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை-திண்டுக்கல் ரெயில்கள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதை ெதாடர்ந்து சோழவந்தான் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், மதுரை கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் மீண்டும் திண்டுக்கல்-மதுரை ரெயிலை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதைதொடர்ந்து சோழவந்தான் ரெயில் நிலையத்திற்கு வந்த திண்டுக்கல்-மதுரை ெரயிலுக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்திய பிரகாஷ், குருசாமி, செந்தில்வேல் ஆகியோர் முன்னிலையில் ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கண்ணன், ஆனந்தன், சரவணன், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன், சுப்பிரமணி, மோகன், கோபி, முத்து காமாட்சி, கனகவேல் உள்பட ரெயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் விவசாயிகள் ராமர் முருகேசன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ரெயிலுக்கு வெற்றிலை மாலை அணிவித்து என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில் இயக்கக் கூடிய அலுவலர், ரெயில் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.