என் மலர்
உள்ளூர் செய்திகள்

அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கிய போது எடுத்த படம்.
நலத்திட்ட உதவிகள்
- அய்யங்கோட்டை பள்ளிக்கு ரூ.9.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட் டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் கழிவறை வசதியின்றி மாணவ-மாணவிகள் வயல் வெளி யை பயன்படுத்தி வந்தனர். இது பற்றி தகவலறிந்த நகரி வைகை அக்ரோ நிறுவனம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது,
ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கருப்பண் ணன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகே சன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளீஸ்வரி வரவேற்றார்.
இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அக்ரோ இயக்குநர் குணசேகரன் ஸ்மார்ட் டி.வி. வழங்கினார்.
இதில் ஆசிரியர்கள் வைகை அக்ரோ நிறுவன பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.