என் மலர்
உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார். அருகில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிககளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
- மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஏழை, எளியோருக்கு ரம்ஜான் பண்டிகையை யொட்டி புத்தாடைகள் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேம்பாட்டு குழு நிறுவனர் காத்துன் பீவி தலைமை தாங்கினார். சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவின் டிரஸ்டி ஓஜிர்கான், தலைவர் அக்பர்கான், செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் ரபிக் முன்னிலை வகித்தனர்.
பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு இஸ்லாமி யர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், கவிஞர் மோகன் தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டச் செயலாளர்கள் பாலமுருகன் தவிடன், பாண்டுரங்கன், வேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், சவுந்தர், அக்பர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.