என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/03/03/1844148-2.webp)
ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது.
- தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மதுரை
மதுரை ெரயில்வே காலனி செம்மண் திடலில் ெரயில்வே பாதுகாப்பு படை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 31-வது கபடி போட்டி இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மதுரை கோட்ட பாதுகாப்பு படை அதிகாரி அன்பரசு பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு கொடியசைத்து கபடி போட்டியை தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.
ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் இன்று லீக் சுற்றுகள் நடக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.
இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மதுரை ெரயில்வே காலனி சிமெண்ட் திடலில் நாளை(4-ம் தேதி) இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளார்.