search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
    X

    செட்டியார் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்கள்.

    கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

    • கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் பூச்செடிகள் கவாத்து எடுக்கும் பணிகள் நிறைவடைந்தது.
    • பூங்காவில் மலைகளின் பசுமையை விளக்கும் வண்ணமும், மலைகளில் இருந்து அருவி வருவது போன்ற புதிய வகை தோற்றத்தில் மலர்களை சுற்றி வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் செட்டியார் பூங்கா உள்ளது. பிரையண்ட் பூங்காவை போல இங்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவது வழக்கம். தற்போது கொடைக்கானலில் 2-வது சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

    இதற்காக பூங்காவை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செட்டியார் பூங்காவில் பூச்செடிகள் கவாத்து எடுக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதனால் அங்கு பல்வேறு வகை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    இதில் ஃபைன்செட்டியா என்ற சிவப்பு வண்ணத்தில் பூத்துள்ள மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர் மழையால் சேதமடைந்த மலர்செடிகள் தற்போது பூத்துக் குலுங்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. செட்டியார் பூங்காவில் மலைகளின் பசுமையை விளக்கும் வண்ணமும், மலைகளில் இருந்து அருவி வருவது போன்ற புதிய வகை தோற்றத்தில் மலர்களை சுற்றி வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில வாரங்களில் கவாத்து எடுக்கப்பட்ட மலர்கள் பூத்துக் குலுங்கும் என பூங்கா அலுவலர் சிவபாலன் தெரிவித்தார். இதே போல் மற்ற சுற்றுலா தலங்களும் சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்வெடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சாரல் மழை பெய்து வருவது சுற்றுலா பயணிகளை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு மாற்றி வருகிறது

    Next Story
    ×