search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை  அருகே பூமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
    X

    மண்டல பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    செந்துறை அருகே பூமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

    • கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    செந்துறை அருகே பெரியூர்பட்டியில் உள்ள பூமாரியம்மன் கோவிலில் 48 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடந்தது. நேற்று 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது.

    முன்னதாக பூமாரியம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், செந்துறை ஊராட்சி தலைவர் சபரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×