search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் மஞ்சள் நீர் ஊர்வலம்
    X

    பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் மஞ்சள் நீர் ஊர்வலம்

    • இந்து அன்னையர் முன்னணியின் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் மோகன் சுவாமி தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் இன்று மாலை மஞ்சள் நீர் ஊர்வலம் நடைபெற்றது. இன்று ஆடி வெள்ளிக்கிழமையின் முதல் வாரம் என்பதால் இந்த ஊராட்சியில் உள்ள கிராம தேவதையான காணியம்மன் கோவிலில் இருந்து, விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மஞ்சள் நீர் குடங்களை பயபக்தியுடன் தலையில் சுமந்த வண்ணம் மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். இதன் பின்னர் இந்து அன்னையர் முன்னணியின் சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் மோகன் சுவாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் குமார், ஆரணி பேரூர் தலைவர் ரங்கநாதன், ஆரணி பேரூராட்சி மன்ற 15-வது வார்டு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருமாள்குப்பம்-மல்லியங்குப்பம் ஊராட்சியில் உள்ள இந்து அன்னையர் முன்னணி அமைப்பினரும், கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×