என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிகிச்சை பெறுபவர்களிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறிய காட்சி.
கரடி கடித்து படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்

- பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
நெல்லை:
கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கரடி கடித்து படுகாய மடைந்த வைகுண்ட மணி, நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேற்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.சிவலிங்கமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.டி.காமராஜ், நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் டென்சிங் சுவாமிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் தளவை சுந்தரராஜ், ராஜவேல், இளங்கோ, எம்.எம்.சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் பால்கனி, நிர்வாகிகள் குபேந்திரா மணி, ராதா, சீவலப்பேரி முருகேசன், பால்பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.