என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்கழி பஜனையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
நயினாரகரத்தில் மார்கழி பஜனை நிகழ்ச்சி
- நயினாரகரத்தில் மார்கழி பஜனை சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
- பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
செங்கோட்டை:
கடையநல்லூர் அருகில் உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்று வருகிறது. சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் பஜனை அதிகாலை 5 மணிக்கே கன்னி விநாயகர் கோவிலில் ஆரம்பித்து சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று, சேனை விநாயகர் கோவில் வந்து முடிவடைகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும் பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மார்கழி பஜனையை திராவிட சுப்பு மற்றும் கோமதி ராமன் வழி நடத்துகின்றனர்.
Next Story