என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
Byமாலை மலர்10 Aug 2022 2:27 PM IST
- தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முத்துக்குமாரசாமி படைக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது. அதிகாலை 4 மணிமுதல் தொடங்கி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முதற்கொண்டு கோவிந்தா, அரோகரா கோஷங்கள் முழங்க பக்தியுடன் தீ மிதித்தனர்.
இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலையில் அழகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
Next Story
×
X