என் மலர்
மயிலாடுதுறை
- 1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
- இதில் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.
இந்தக் கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 1987-90-ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து 1000 பனை விதைகள் விதைப்பு செய்யும் பணி நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து பனை விதையை விதைத்து தொடக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் குமார், முன்னாள் முதல்வர் தங்கமணி, துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், கணினி துறை தலைவர் விஜயலட்சுமி, மின்னியல் துறை தலைவர் கீதா மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
- மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீர்காழி ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பள்ளி செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் சிவாஜி, துணை மேலாளர் ரஃபிக் அகமது ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4000 மரக்கன்றுகளை வழங்கி பேசினர்.
தொடர்ந்து தாவரவியல் ஆசிரியர் ராம்குமார் மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோஜா, எல்ஐசி அதிகாரிகள் தினேஷ், பாபு, அரவிந்தன், நிக்சன், நரேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள், எல்.ஐ.சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.
- குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது.
- திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதன் அடிப்படையில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமையில், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு, சீர்காழி தீயணைப்பு அலுவலர் அலுவலர் ஜோதி, கொள்ளிடம் போலீஸார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் குடிசை வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா (வயது 26) பழனிச்சாமி மனைவி இந்திரா(56), மச்சராஜ் மனைவி தனுஷ்(50) ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கொள்ளிடம் காவல்நி லையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர்.
விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த 4 கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்ழுகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சமூக பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
- முடிவில் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
சீர்காழி:
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் நாட்டு நல பணி திட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து சமூகப் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட பணி 30 மாணவர்கள் சீர்காழி ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் உள்ள செடிகள்,புற்கள், மற்றும் குப்பைகளை அப்புற ப்படுத்தினர்.
ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் தலைவர் பா. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சீர்காழி ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி, ரோட்டரி சங்கம் மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், செயலாளர் ரவி ,பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் துரைசாமி, மோகனசுந்தர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார், இணைச் செயலாளர் மார்க்ஸ் பிரியன், ரயில் சங்க உறுப்பினர் ராஜராஜன், சுதாகர் அப்பாஸ் அலி, சண்முகம் மற்றும் சீர்காழி ரயில் நிலைய அலுவலர் மற்றும் டி.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
- பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.
சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.
- ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.
- சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மயிலாடுதுறை:
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டனர்.
பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டியபோது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.
எனவே, காசிக்கு நிகராக மயிலாடுதுறை போற்றப்படுகிறது.
நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புஷ்கர தொட்டியில் போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாக புனித நீர் தெளிக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்திருந்தது.
காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடினர்.
தொடர்ந்து அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனாகிய அய்யாறப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோவில் விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு பக்க கரைகளிலும் எழுந்தருளினர்.
அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வாக சிவ வைணவ தலங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவமாக திருக்கல்யாணம், தேரோட்டம், அமாவாசை தீர்த்தவாரி, கடைமுழுக்கு, முடவன் முழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இதனால் சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது.
இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமல் இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய்செந்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதாவிடம் சாட்டை வாக்காளர் தூர்வாரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் சாட்டை வாய்க்காலை நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகராட்சி ஆணையருக்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மேம்பாட்டுக் குழு துணை அமைப்பாளர் செந்தில் உடனிருந்தார்.
- மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், கபினி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.
பற்றாக்குறை காலங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாத நிலையில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்ட 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை.
காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்துள்ளளார்.
- கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தருமகுளம் கடைவீதியில் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் நேற்று பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.
வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனைஅடுத்த மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார்.
புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், கடையை முறையாக பராமரிக்காததால் அதனை சீரமைத்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை மூடி சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மானை கைப்பற்றி சீர்காழி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- நாய் துரத்தியதில் மான் முள்வேலியில் சிக்கி இறந்ததா?
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு இடங்களில் மான்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
இதுபோல செம்பியன் வேலங்குடி பகுதியில் உள்ள கருவேலங்காட்டிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்நிலையில் செம்பியன் வேலங்குடி பொறை வாய்க்கால் அருகே சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் புள்ளி மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் முள்வேலியில் மோதிய அதிர்ச்சியில் இறந்ததா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.
பிரேத பரிசோதனையின் முடிவிலேயே மான் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
- கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவு பகுதியை அடைத்தார்.
சீர்காழி:
சீர்காழியிலிருந்து தூத்துக்குடி நோக்கி மீன் லாரி சென்றது.
மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிர்சாதனபெட்டி வசதிகொண்ட அந்த லாரியிலிருந்து சாலைமுழுவதும் துர்நாற்றத்துடன் மீன்கழிவுநீர் கொட்டிக்கொண்டே சென்றது.
இதனால் பொது மக்கள் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் மீன் கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவுபகுதியை அடைத்தார்.
அதன்பின்னர் பொது மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி, டிஆர்ஓ. மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர்.
கூட்ட அரங்கில் மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து கலெக்டரை முற்றுகையி ட்டனர்.
தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கா ததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கலெக்டர் மகாபாரதி பெண்களிடம் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது.
ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்ப ட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவு செய்ய தாமதமா னவர்களை உடனடியாக பதிய பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டனர்.