என் மலர்
மயிலாடுதுறை
- கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
- சிறந்த கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார்.
இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் சக்தி தலமான புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்க விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அம்மன் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புற்றடி மாரியம்மன் சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி பிரகார உலா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.
- மேல் சிகிச்சைக்கு 10 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
- முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலசங்கம் கூட்டமைப்பு , பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை, ஐ கேர் ஆப்டிகல்ஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
. இந்த முகாமிற்கு கூட்டமைப்பு தலைவர் சாமி செல்வம், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார், கவுரவத் தலைவர் இளமுருகசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்புச் செயலாளர் பாபு வரவேற்றார்.
இந்த முகாமில் ஆண் பெண் என 150 க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு கண்களுக்கு விழி ஒளி பரிசோதனை, சர்க்கரை நோயினால் வரும் விழித்திரை பாதிப்பு, தலைவலி, கண் புரை, கண் உறுத்தல், வீக்கம், கண் எரிச்சல், நீர் வடிதல், வழி திரை பாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு அட்வான்ஸ் ஆட்டோ ரிப்ரஷன் இயந்திரம் மூலம் கண்ணை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். மேல் அறுவை சிகிச்சைக்கு 10 நபர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முகாமில் பாதி விலையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், சமூக சேவைகி பத்மா, மேலாண்மை குழு உறுப்பினர் அப்பர் சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு நல சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் நெறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்
- காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
- மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).
இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.
காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சீர்காழி:
சீர்காழி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் ஆள் பற்றாக்கு றையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல் பணி செய்ய நிர்பந்திக்கும் சீர்காழி மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தடுக்க தவறிய மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாய்ஸ் பெடரேஷன் மாநிலத் துணைத் தலைவரும், நாகை மின் திட்ட தலைவருமான செல்வராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோவில் உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, 1008 சங்குகளால் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி மற்றும் பாடகசாலை தலைமை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீன கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரூ.1.83 கோடி செலவில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
- பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது காரைகள் பெயர்ந்து விழும் சூழல் நிலவுகிறது.
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகாமையில் தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்தது. 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சான்றிதழ் தேவைகளுக்காக தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
பழமையான இந்த கட்டிடத்தை அகற்றி வேறு புதிய கட்டிடம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
இதனையடுத்து தாசில்தார் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண அரங்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டு அது முதல் இயங்கிவருகிறது.
அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.4 கோடி வரை கூடுதல் நிதி கோரப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில் உள்ளது.
அலுவலகத்தின் உள்ளேயும் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்தும், அதன் கீழ் உள்ள தெர்மாகோல் பால்சீலிங் வேலைபாடுகள் உடைந்தும் தொங்கிகொண்டுள்ளது.
வளாகத்தின் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அவ்வபோது உள்ளே புகுந்து அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
தற்போது துணை வட்டாட்சியர்கள் அலுவலக கான்கிரீட் மேற்கூரைகள் சிமென்ட் காரைகள் அவ்வபோது பெயர்ந்து திடிரென கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வேறு கட்டடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றிடவும், உடனடியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டும் என்றார்.
- ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சீர்காழி:
தருமபுரம் ஆதீனத்திற்கு ட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபி ஷேகத்துக்கு யாகசாலை அமைக்க கோவிலின் நந்தவனத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
பின்னர், இவை அனைத்தும் கோவியிலில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளன.
இந்நிலையில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மேற்பார்வையில், பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் புனிதவதி, பிரசன்னா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 140 பேர், சமூக அறிவியல் பாடத்தில் பழைமையான சிலைகள் மற்றும் அகழ்வா ராய்ச்சி குறித்த பாடத்திற்காக இக்கோவி லுக்கு வந்து, மேற்கண்ட ஐம்பொன் சுவாமி சிலைகளையும், தேவாரப்பதிக செப்பேடு களையும் பார்வையிட்டனர்.
இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து சமூக அறிவியல் ஆசிரியை சொர்ணா விளக்கிக் கூறினார்.
சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த சிலைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
- மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்க பரிசோதனை செய்யப்பட்டது.
- ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், காளகஸ்தி நாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு செம்பனார்கோயில் கால்நடை மருத்துவர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் சுதா, பிரபாவதி, மோனிஷா ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மலடு நீக்குதல், குடல் புழு நீக்குதல் மற்றும் ஆடு, கோழி, நாய்களுக்கு நோய் தடுப்பூசிகளும் போடப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்னர்.
முகாமில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் பொறுப்பா ளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோர்ட்டு பணிகளை ஒருநாள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு காவிரி நதிநீர் ஆணைய உத்தரவின் படியும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படியும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பெற்று தர முயற்சிகாத மத்திய அரசை கண்டித்தும் காவிரி கூட்டியக்கம் சார்பில நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை ஒருநாள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வழக்குரைஞர் சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமையில், செயலாளார் மணிவண்ணன் , பொருளாளர் ராம்குமார் முன்னிலையில் துணைத் தலைவர்கள் கவிதா, தாமஸ் குமார், துணை செயலாளர்கள் சுதா,ஆனந்த ,செந்தில்குமார் ,விஜய் பொருளாளர் ராம்குமார் மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, சுந்தரையா,வெங்கடேசன், ரங்கராஜ் அப்துல்லாசா,குமரேசன்,ஆத்மநாதன்,கார்த்திக் கலந்து கொண்டனர்.
- தடுப்பணை கட்டி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
- தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில்பொறுப்பாளர்கள்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஞானமணி தலைமை வகித்தார்.
செயலாளர் சத்யநாராயணன், பொருளாளர் வெங்கட்ராஜ், கௌர வதலைவர் கார்த்தி கேயன், ஆலோசகர் சேதுராமன், இளங்கோவன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்னாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வரும் காலத்தில் இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் கூடுதலாக தடுப்பணைகளை தமிழக அரசு கட்டவேண்டும்.
அவ்வாறு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி உணவு தானிய உற்பத்தியை பெருக்கிடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
- ரூ. 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை வழங்கினார்.
- எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வீல்சேர், மெத்தை வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வ ரன்கோயில் அடுத்த புங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் பணியாற்றி வருகிறார்.
இயல்பாகவே ஏழை, எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், கல்வி உபகரணங்கள், உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் இடர்பாடுகள் சிக்கிய மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அருணாச்சலம் அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிர் உடன் இணைந்து சுமார் ரூ.10 லட்சம் நிதி திரட்டி தற்போது 8 அரசு பள்ளிக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார்.
அதேபோன்று இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கரநாற்கா லிகள் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.
புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ், கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் கோமதி, வட்டார மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி,பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா,ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்கமாலூதீன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அரசு பள்ளிக ளுக்கான குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்களை அந்தந்த பள்ளி தலைமைஆசிரியரிடம் வழங்கினார்.
அதேபோல் வைத்தீஸ்வரன்கோயில், எடமணல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு உரிய வீல்சேர், மெத்தை உள்ளிட்டபொ ருட்களையும் ஒப்படைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.