என் மலர்
மயிலாடுதுறை
- கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.
- புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சிறு வேம்பு பராசக்தி என்கிற வேம்பரிசி அம்மன் கோயில் உள்ளது.
இக்கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.
இதனை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்பூர் வாங்க பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது விழா அன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் கோயில் விமான கலசத்தை வந்து அடைந்தது கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதில் கோயில் நிர்வாகி சாந்தகுமாரி, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் திரளான பக்தர்கள் தெருவாசிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீசார் செய்தனர்.
- 4-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.
இந்த கோயிலில் தான் கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த பல கோயில்களில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.
எங்கும் இல்லாத படி இங்குள்ள வடக்கு நோக்கி நிஷ்டையில் அமர்ந்து காட்சி தரும் வடிவேல் குமரன் சந்நிதி இருந்து வருவது கூடுதல் சிறப்பாகும்.
திருமயிலாடியில் பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடை பெற்றது.
விழாவை யொட்டி முதல் நாள் காலை யாக பூஜை பூமி பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து மூன்று கால யாகபூஜைக்கு பிறகு நேற்று நான்காவது யாக கால பூஜையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், பால கும்பாபிஷேகமும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து பிரகன்நாயகி, வடக்கு நோக்கிய வடிவேல் குமரன், குளக்கரை விநாயகர், நடராஜ பெருமான், கஜலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபி ஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் , தொழிலதிபர் சகாதேவன், ஊராட்சி தலைவர்கள் நாகராஜன், இளவரசன்,கனகராஜ் மற்றும் உள்ளூர் வெளியூர்க ளிலிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள்செய்திருந்தனர்.
- மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- நீட் ரத்து மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழக மாணவர்களிடையே நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் , மாநிலங்களவைக்குழு உறுப்பினருமான திருச்சி சிவா கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்விற்கு துணைபோன கட்சி அ.தி.மு.க., . நீட் தேர்வை ரத்து செய்கின்ற திருத்த சட்ட மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க. என கூறினார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
- கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2-வது தளமான கோவிலில் பஞ்சபாண்டவர்கள் சுவாமியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.
மாணிக்க வாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாக கால பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன.
நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன.
இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பா பிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.
முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன
- அந்த வழியாக சென்ற மாணவர்களை கடித்து வந்தன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.
இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.
- ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்,
- மீண்டும் காலையில் வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.
அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் பதிவான ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 6 கல்லூரிகளை சேர்ந்த 420 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- 15 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர்கள் அர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசியதாவது :-
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமை யையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் தெரிந்துக்கொள்ளும் வகையில் பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் குணசேகரன் கலந்து கொண்டு ஏன் சிறந்தது தமிழ்நாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இதில் 6 கல்லூரிகளை சேர்ந்த 420 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்ப் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட மாணவ, மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி, கேள்வி யின் நாயகன், கேள்வியின் நாயகி, விருதி னையும் 15 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, தாசில்தார்கள் செந்தில்குமார் (சீர்காழி), சரவணன் (தரங்கம்பாடி), மகேந்திரன் (மயிலாடுதுறை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தினத்தை யொட்டி கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர தின தமிழ் கட்டுரை போட்டி மற்றும் சுதந்திர தின தமிழ் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
தனியார் வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள், பதக்கம் வழங்கும் நிகழ்வு பள்ளி தலைமையாசிரியர்அ றிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது.
உஜ்ஜுவன் வங்கி கிளை மேலாளர் அன்வர் அலி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாணவ-மாணவியருக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி கிளை மேலாளர் ஜெர்மனாஸ், பணியாளர்கள் லட்சுமணன், மணிவண்ணன், பள்ளி ஓவிய ஆசிரியர்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்ஹரிஹரன் ஆகியோர் செய்தி ருந்தனர்.
நிகழ்வில் பள்ளி உதவி தலைமையாசிரியர் துளசிரங்கன், சீனிவாசன் கலந்துகொண்டனர்.
நிறைவாக பள்ளி உதவி தலைமையாசிரியரும் உடற்கல்வி இயக்குனருமான முரளிதரன் நன்றி கூறினார்.
- வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைக்க வேண்டும்.
- அனைத்து விதமான திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பத னிருப்பு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சித் துணைத் தலைவர் அனிதா பார்த்திபன் வரவேற்றார்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகா பாரதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறை களை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் .
அப்போது கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சாலை விரிவாக்க பணியின் போது தமது வீடு இடமாற்றம் செய்யப்பட்டதால் கழிப்பிட வசதி இல்லை என தெரிவித்தார்.
அதேபோல் அல்லிவிளாகம் பகுதியில் விவசாய நிலங்களை காட்டு ப்பன்றிகள் சேதப்படுத்து வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பின்னர் கலெக்டர் பேசுகையில், இந்த ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் அவசியம் கழிவறை அமைத்திட வேண்டும் கழிவறை வசதி இல்லாத வர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அணுகி நிதி உதவி பெறலாம்.
தமிழக அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து விதமான திட்டங்க ளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், திமுக பிரமுகர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக கிராம சபை தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து வாசித்தார்.
வேளாண்மை துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது.
- கொள்ளிடம் அருகே எருக்கூரில் புதிய கால்நடை மருத்துவ கிளை நிலையம் திறப்பு விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் அருகே எருக்கூரில் கால்நடை கிளை நிலையம் திறக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் எருக்கூரில் கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு நாகப்பட்டினம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் வரவேற்றார்.
ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமேகலை கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகளை வழங்கியும் விவசாயிகள் கடன் அட்டை பெறுவதற்கான 200 விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.
இதில் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் அருள்மொழி மற்றும் கால்நடை டாக்டர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், விவசாயிகள்,கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
- மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
- மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அச்சம் அடைந்த செல்வமணி பாம்பு பிடிப்பவருக்கு தகவல் அளித்தனர்.
- பிடிப்பட்ட நாகப்பாம்பு வன பகுதியில் விடப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருத்தாளமுடையார் கோவில் தெருவை சேந்தவர் செல்வமணி. இவரது வீட்டில் நாகப்பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்தியது. இதனால் அச்சம் அடைந்த செல்வமணி குடும்பத்தினர் சீர்காழி சேர்ந்த பாம்பு பிடிக்கும் பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாண்டியன் விரைந்து சென்று செல்வமணி வீட்டில் புகுந்த சுமார் 6 அடி நீள நாக பாம்பினை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிப்பட்ட நாகப்பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.