என் மலர்
மயிலாடுதுறை
- மாணவர்களை ஊக்குவித்தால் அவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
- முன்னாள் மாணவர்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவில் மாணவ- மாணவிகளின் தனித்திறன் போட்டிகளான கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர்.
அப்பொழுது முன்னாள் மாணவர்கள் கூறுகையில்:-
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள் இணைந்து இதுபோல் தற்போதைய மாணவர்களை ஊக்குவித்தால் மாணவர்களின் பல்வேறு திறன்கள் வளர்க்கப்படும்.
மேலும், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்தவும், பரிசு வழங்குவதற்கும் முன்வர வேண்டும் என்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலை ஆசிரியர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
- பரிமள ரங்கநாதர் கோவிலில் சமபந்தி விருந்தை வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, பஞ்ச அரங்கதலங்களில் பிரசித்தி பெற்ற திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தினை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்து உணவு அருந்தினார்.
இதில் நகரசபை தலைவர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து உண்டனர்.
- தூய்மை பணியாளரில் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
- தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தனது வார்டில் சுதந்திர தினத்தையொட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து தூய்மை பணியாளரின் ஒருவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.
தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி சீர்காழி பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
- மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உள்ள ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் மகாபாரதி தேசியகொடியை ஏற்றி வைத்தார். பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளும், அவரது குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஜெயக்குமார் நகரத் துணைத் தலைவர் சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர் புற நூலகர்கள் வனத்துறை காவலர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பபட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேலு, வட்டச் செயலாளர் பிரேம்சந்திரன், இணைச்செயலாளர் வேம்பு, செயற்குழு உறுப்பினர் குருராஜன், வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கௌசல்யா சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
- மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் சார்பில் வழக்குபதிவு செய்து அபராதம் வசூல் செய்யப்படும்.
சீர்காழி:
சீர்காழி நக ர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-
சென்னையில் மாடு முட்டி பள்ளி சிறுமி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவம் நடைபெறாது இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
சீர்காழி நகரில் இது போன்று பொதுமக்கள், போக்குவரத்திற்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றிதிரிகிறது.
கால்நடை உரிமையாளர்கள் தங்க ளது கால்நடைகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்கவேண்டும்.
மாறாக மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால், சீர்காழி நகராட்சி சார்பில் காவல்துறை உதவியோடு கால்நடைகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலையில் விடப்படும்.
மேலும் கால்நடை உரிமையாளர் மீது காவல்துறை சார்பில் வழக்குபதிவு செய்து அபரா தம் வசூல் செய்ய ப்படும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- மாரியம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
- அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக் கடை ஞாயிற்று கிழமையை முன்னிட்டு பால் குடம் விழா நடைபெற்றது. கருவரையில் உள்ள மாரி யம்மன் திருவுருவத்துக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் அம்பாள் விதி உலாவும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்துக் கொன்டு அம்மன் சன்னதிக்கு வந்து தங்களது நேர்த்ததிக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார அர்ச்சனை செய்து தீபாரத னையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்கள். விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தொழிலதிபர்ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஆன்மீகத் தொண்டர் எஸ். குருமூர்த்தி, சாமி, செல்வம், ரவி உட்பட பலர் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
- பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 236 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது அண்மையில் நடைபெற்றது.
சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த 236 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜய் வரவேற்றார். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். எழில் மலர் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து போட்டிகளையும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் முடிவில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார் போட்டியின் குறுவட்ட இணை செயலாளர் அரசு உயர்நிலைப்பள்ளி மேலச்சாலை உடற்கல்வி ஆசிரியர். சுந்தரவடிவேல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
- பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார்.
- உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிர் மூலம் பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார்.
அதாவது பூதக்கண்ணாடி மூலம் மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர்களை உருவத்துக்கேற்ப பாய்ச்சுவார். அப்போது உருவ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி நெருப்பு பிடிக்கும். பின்னர் நெருப்பு பற்றிய இடத்தில் கரி படிந்து உருவம் பிறக்கும். இதன்பின் பஞ்சை வைத்து துடைத்து உருவத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பார். இந்த முறைக்கு 'பர்னிங் வுட் ஆர்ட்' என்று பெயர். இந்தியாவிலேயே இவர் ஒருவர் மட்டும்தான் இந்த முறையில் ஓவியம் வரைந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.
பின், அங்குள்ள டேனிஸ் கோட்டை முன்பு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் மகாத்மா காந்தியின் உருவபடத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் மூலம் மரப்பலகையில் வரைந்து அசத்தி உள்ளார்.
மேலும், அவர் வரைந்த ஓவியத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அடுத்த மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்எல்ஏ, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து .மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது, மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள் இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கப்படும்.
தமிழக அரசு தற்பொழுது பல்வேறு கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
மேலும் உப்பு நீர் ஊருக்குள் புகாத வகையில் பல்வேறு உப்பனாற்றில் தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துறைமுகங்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர் நலன்களை பாதுகாக்கும் வகையில் அடுத்த மாதம் 18ம் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வ ரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், விஜயகுமார், மலர்விழி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- படகில் கடத்தி சென்றபோது தவறி விழுந்து கரை ஒதுங்கியதா?
தரங்கம்பாடி:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையோரத்தில் 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுக்கி இருப்பதாக மீனவர்கள் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தரங்கம்பாடி கடற்கரையோர காவல்நிலைய போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் ஒருபொட்டலம் கரை ஓதுங்கியதாக தகவல் கிடைத்து கடலோர காவல்படை போலீசார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலங்களை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதால் யாராவது படகில் கடத்திவந்தபோது வீசி சென்றார்களா அல்லது படகில் கடத்தி சென்றபோது தவறிவிழுந்து கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- அறுவடை பணிகள் நடைபெறும் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், சேமங்கலம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாள ர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வந்தன. மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது.
அதில், மயிலாடுதுறை வட்டத்திற்கு இளந்தோப்பு, திருவாளபுத்தூர், கிழாய், கொற்கை, கோடங்குடி, திருச்சிற்றம்பலம், ஆத்துக்குடி, முருகமங்களம், தாழஞ்சேரி, திருவிழந்தூர், சித்தமல்லி, 24 வில்லியநல்லூர், குத்தாலம் வட்டத்திற்கு பழையகூடலூர், மேலையூர், குத்தாலம், நச்சினார்குடி, கங்காதாரபுரம், கொக்கூர்.
வழுவூர், எழுமகலூர், ஆலங்குடி, 52 வில்லியநல்லூர், பேராவூர், சீர்காழி வட்டத்திற்கு கொண்டத்தூர், அரசூர், பனங்காட்டாங்குடி, உள்ளிட்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 264 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.59 இலட்சத்து 79 ஆயிரத்து 420 பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 57 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டத்தில்; எங்கெல்லாம் அறுவடைக்கு தயாராகி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறதோ அந்த இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.