search icon
என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம பால தண்டாயுதபாணி ஆலயத்தில் ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இவ்ஆண்டு 6 நாள் உற்சவம் கடந்த 13ம் தேதி தொடங்கியது, தினந் தோறும் மாலை சிறப்பு யாகமும் அதனைத் தொடர்ந்து பால், தயிர், சந்தனம் தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் மகா தீபாரதனை காட்டப்படும்.

    இதுபோல் இன்று முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான முருக கடவுள் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் விழா நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்றதாகும்.
    • சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    மயிலாடுதுறை காவிரி தென் திசையில் ஸ்ரீ மயூரநாதர் கோயிலும், வடக்கு திசையில் ஸ்ரீவதான்யேஸ்வரர் கோயிலும் ஐயாரப்பர் கோயில் புனுகீஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் படித்துறை விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்கள் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறும்.

    கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கிய உற்சவம் திருக்கல்யாணம், தேர், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி நேற்று மதியம் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அனைத்து கோயில்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதற்காக நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தனர்.

    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ்சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்த நிலையில் இப்பகுதியில் வடிகால் மற்றும் பாசனவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதகுகளில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் படர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது .

    எனவே பருவ மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை, செடி கொடிகளை அகற்றி சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழவாற்றின் குறுக்கே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.
    • சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.

    சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ.6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

    இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியே இருசக்கர மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.

    நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம் கடலங்குடி பூதங்குடி உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாலம் வழியே தான் செல்ல வேண்டும்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    இந்த தண்ணீர் அதி வேகத்துடன் சந்திப்பதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பாலத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் பாலத்தின் ஒரு பகுதி வழியே கடந்து செல்கின்றனர்.

    பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மயிலாடுதுறை செல்வதற்கு 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இருந்து மாவட்டம் தோறும் மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த மூன்று பள்ளிகளில் ஒன்றாக சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இந்த பள்ளிக்கான பரிசு மற்றும் கேடயம் சென்னையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் வழங்கினார்.

    அப்போது அப்பள்ளியை சேர்ந்த சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் பாலமுருகன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் பரிசு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை, பள்ளி செயலர் சொக்கலிங்கம் மற்றும் பிற பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
    • மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுமார் 5000 ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, ஆத்மா திட்ட மேலாளர் அரவிந்த், அலுவலர்கள் சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு,நாதல் படுகை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த நேரடி விதைப்பு பயிரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா கூறுகையில் நெற்பயிரில் பரவலாக குருத்துப் புழு தாக்குதல் இருந்து வருகிறது.

    இந்த மழையினால் பயிரிலுள்ள குருத்துப் புழுக்கள் தானாகவே அழிந்து விடும் என்றார்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரப்பள்ளம் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தண்ணீரில் மூழ்கியிருக்கும் பயிர்களை அமைச்சரிடம் காண்பித்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உப்பனாற்றை முழுவதுமாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் கதவணைகளை புதுப்பித்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    இதன் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது, 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.

    மேலும் கனமழை காரணமாக எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும் விவசாயிகளின் கோரிக்கையான உப்பனாறை தூர்வாரவும் இப்பகுதியில் பழுதடைந்துள்ள 6 கதவணைகளை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 52,000 ஹெக்டேர் மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள அனைத்து விவசாயிகளும் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைநீர் மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
    • வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை நீர் உள் பிரகாரத்தை சுற்றி தேங்கி நிற்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வழக்கமாக கோவில் வளாகத்தில் உள்ள மழை நீர் கோவில் பின் புறம் உள்ள தீர்த்தகுளத்தில் நிரம்பிய பிறகு மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்படும்.

    கடந்த ஆண்டு கோவில் உள் பிரகாரத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் கோவில் வளாகத்தில் தேங்காதவாறு கோவில் நிர்வாகிகள் மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளனர்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • சேற்றில் கால் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.
    • மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி உயிரிழந்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45).

    தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள கதிர் விஸ்வலிங்கம் என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் விலை நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக இன்று வரப்புகளை வெட்டி அகற்றும் பணியை கனகராஜ் மேற்கொண்டுள்ளார்.

    அப்பொழுது மழையின் காரணமாகவும் சேற்றில் சிக்கியதால் தவறி வயலில் தேங்கிய தண்ணீரில் விழுந்துள்ளார்.

    சேற்றில் சிக்கியதால் மீண்டு எழ முடியாமல் தண்ணீரில் மூச்சு திணறி அங்கேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும்

    பாகசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விவசாய கூலி தொழிலாளியான கனகராஜ் இறந்த சம்பவம் காத்திருப்பு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சீர்காழியில் வருகிற 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டு இருந்தது.
    • மழையில் காரணமாக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது சிறப்பு தனியார்துறை வேலைவாய்;ப்பு முகாமானது வருகிற 18-ந்தேதி சனிக்கிழமையன்று சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

    இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.

    ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

    அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.

    நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்திலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மயூரநாதர் சுவாமி, வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் நிறுவாகிகள், தருமபுரம் ஆதீனம் நிறுவாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பயிரில் இலைச்சுருட்டுபுழு தாக்குதல் அல்லது தட்டைப்புழு தாக்குதல் இருந்து வருகிறது.
    • மழை தூறல் இருந்து வருவதே இப்பூச்சி தாக்குதலுக்கான காரணமாகும்

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், பச்சபெரு மாநல்லூர், மகாராஜபுரம், மாதானம், வேட்டங்குடி, குன்னம், பெரம்பூர், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 25 முதல் 30 நாள் வரை வயதுள்ள சம்பா நேரடி விதைப்பு பயிரில் இலைச்சுருட்டுபுழு தாக்குதல் அல்லது தட்டைப்புழு தாக்குதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொள்ளிடம் அருகே பச்சபெருமாநல்லூர் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில் ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள சம்பா நேரடி விதைப்பு பயரில் பரவலாக இலை சுருட்டுபுழு பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

    மேகமூட்டம் மற்றும் லேசான மழை தூறல் இருந்து வருவதே இப்பூச்சி தாக்குதலுக்கான காரணமாகும். அதிக மழை பொழிவு இருந்தால் பூச்சி தாக்குதலும் அழிந்து விடும்.ஆனால் லேசான தூறல் மழை இருந்து வருவது இப் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

    இதனை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது கார்ட்டாப்ஹைட்ரோகு ளோரைடு அல்லது புரப்பன்னபாஸ் பூச்சிக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 400லிருந்து 500 மில்லி மீட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார். வேளாண் உதவி அலுவலர்கள் பாலச்சந்திரன், மகேஸ்வரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    ×