என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வெங்கடாம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
By
மாலை மலர்15 May 2023 1:19 PM IST

- கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- மருத்துவர் பாண்டியராஜன், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஊராட்சிமன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சிமன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் அரசு மருத்துவர் பாண்டியராஜன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.
Next Story
×
X