search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிதி உதவி
    X

    கணவனை இழந்த பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய நிதியை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் வழங்கிய போது எடுத்தபடம்.


    சாத்தான்குளத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிதி உதவி

    • சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த முத்தையா மனைவி மாலதி (வயது 37), ஆட்டோ டிரைவரான இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவருக்கு ரூ.25ஆயிரம் நிதியுதவி வழங்கினார்

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவை சேர்ந்த முத்தையா மனைவி மாலதி (வயது 37), ஆட்டோ டிரைவரான இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்களைப் படிக்க வைப்பதற்கு சிரமப்படுவதாக தி.மு.க. இளைஞரணி் செயலாளர் உதயநிதிஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார்.

    அவரது அறிவுரையின்படி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவருக்கு ரூ.25ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அந்த நிதியினை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப், நகர செயலாளர் மகா இளங்கோ ஆகியோர் மாலதியிடம் வழங்கினர்.

    இதில் மாவட்ட பிரதிநிதிகள் சரவணன்,வேல்துரை, ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், துணை அமைப்பாளர்கள் பிரதாப்சிங், செந்தில் முருகன், ஒன்றிய பிரதிநிதி குருசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×