என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் எம்.எல்.ஏ வானதி- சீனிவாசன் தம்பதி சஷ்டியப்த பூர்த்தி
- விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
- விவசாயிகளின் பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.
தரங்கம்பாடி:
பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர்.
அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.
தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின்னர் அனைவரும் கோவிலில் உள்ள பிற சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனார்.
பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும். நானும் டெல்டாகாரன் தான் என கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை என்றார்.
அப்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.