என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரணியை தூர்வாரும் பணியினை மாவட்ட கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் கலெக்டர் ஆகாஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
- நியாய விலை கடையில் பொருட்களின் தரத்தினையும் சுன் சோங்கம் ஐடக் சிரு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்பகுதியில் உள்ள சுமார் 342 வீடுகளில் 1898 பேர் வசித்து வருகின்றனர். அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1489 பேர், 1402 நபர்களுக்கு பரி சோதனை செய்யப்பட்டதில் 38 நபர்களுக்கு ரத்த அழுத்த நோயும், 28 நபர்களுக்கு நீரழிவு நோயும், 30 நபர்களுக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் கண்டறியப்பட்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு பிசியோதெரபியும், 4 பயனாளிகளுக்கு முட நீக்கியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வடகரை கீழ்படாக பேரூராட்சி பகுதியில் வா வா நகரம் ஊரணியை தூர்வாரி ஆளப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலா மார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், துரைச்சாமிபுரம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொரு ட்களின் தரத்தினையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கீழ் பிடாகை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, துணை இயக்குனர் முரளி சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா,பாலமர்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.