என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை எரித்த மர்ம கும்பல்
- திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு நேற்று இரவு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர்.
- போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது புகை வருவதை பார்த்து அங்கு சென்றார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு நேற்று இரவு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் இந்த மோட்டார் சைக்கிள்களை மர்ம கும்பல் தீ வைத்து எரித்தனர்.
ரெயில்வே பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புகை வருவதை பார்த்து அங்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இருந்த போதும் மோட்டார் சைக்கிள்களின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமானது. தீவைத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்பதும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாததால் தீவைத்து சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.