என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வாழப்பாடி அருகே பாம்பு கடித்து 3-ம் வகுப்பு மாணவன் பலி வாழப்பாடி அருகே பாம்பு கடித்து 3-ம் வகுப்பு மாணவன் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/11/05/1977341-1.webp)
X
ஹரீஷ்
வாழப்பாடி அருகே பாம்பு கடித்து 3-ம் வகுப்பு மாணவன் பலி
By
மாலை மலர்5 Nov 2023 1:06 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8).
- இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8). இந்த சிறுவன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் . நேற்று இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது. இதில் விஷம் ஏறி மயங்கி கிடந்த சிறுவன் ஹரீஷை மீட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இச்சம்பவம் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ேமலும் சிறுவனை கடித்த பாம்பை கண்டுபிடித்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
Next Story
×
X