என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதானஓவிய ஆசிரியர் சிறையில் அடைப்பு
- ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
- ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஓவிய ஆசிரியர்
இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசுக்கு தகவல்
இதுபற்றி தெரிய வந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி சுமன், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனராசு, முத்து கிருஷ்ணன், மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வாக்குவாதம்
பொதுமக்கள் சமசரம் அடையாமல் ஆசிரியர் ராமமூர்த்தியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தனர். இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை ஒரு அறையில் இருந்து வெளியே கொண்டு வர முயன்றனர்.
கைது
இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். பின்னர் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர். பின்னர் வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை சஸ்பெண்டு செய்யவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.