search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
    X

    கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த பக்தர்கள்.

    குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

    • குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
    • எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, எட்டுப்பட்டி கிராமம், குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    விழாவையொட்டி, நேற்று காவிரிக் கரையில் எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.

    பின்னர் புனிதநீர் நிரம்பிய சுமார் 700 தீர்த்தக் குடங்களையும் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக குன்னத்தூர் மகா மாரியம்மன் சன்னதிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.

    முன்னதாக குடமுழுக்கு விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜை நடந்தது.

    Next Story
    ×