என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதியில் முருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
- கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவில்களில் ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவில்களில் ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாறுஅருகில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ராஜா கோவில், திருவேலீஸ்வரர் கோவில், அதேபோல் அனிச்சம் பாளையத்தில் உள்ள முருகன் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூரில் உள்ளவிஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், கபிலர் மலையில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், பாலப் பட்டியில் உள்ள முருகன் கோவில், மோகனூரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், பச்சைமலை முருகன் கோவில் உள்ளிட்ட பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.