என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழை
- பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், வடகரை ஆத்தூர் கொத்தமங்கலம் குறும்பல மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்கா பாளையம், மணியனூர், குன்னமலை ,கூடச்சேரி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனை தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், கூலி வேலைக்குச் சென்று வீடுகளுக்கு நடந்த செல்லும் கூலித்தொழிலாளர்கள் நனைந்து கொண்டு சென்றனர்.
அதேபோல் சாலையோர கடைக்களிலும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர். இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கிராமப் புறங்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. இந்த மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.