என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை
- நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல் பாளையம், அண்ணா நகர், சானார் பாளையம், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், வடகரை யாத்தூர், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங் குறிச்சி, சோழசிரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை இரவும் பெய்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு நடந்து செல்பவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சுற்று வட்டாக பகுதிகளில் சாலை ஓரங்களில் விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், சிற்றுண்டி கடைகள், உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடி யாமல் அவதிப்பட்டனர்.
அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயி லின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வந்தனர். இந்நிலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.