என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதியில் முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
- முருகன் கோவில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
- பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், பாலப்பட்டி மற்றும் பிராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்க ளில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், எல்லையம்மன் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் எழுந்தருளியுள்ள முருகன் மற்றும் பாலப்பட்டியில் உள்ள கதிர்மலை முருகன், பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்க டவுள், பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும், திருக்கல்யாண வைபவ விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.