என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![டாஸ்மாக் பார் தொழிலாளி கதி என்ன? ேஜடர்பாளையம் காவிரி ஆற்றில் இன்று7-வது நாளாக தொடரும் தேடுதல் பணி டாஸ்மாக் பார் தொழிலாளி கதி என்ன? ேஜடர்பாளையம் காவிரி ஆற்றில் இன்று7-வது நாளாக தொடரும் தேடுதல் பணி](https://media.maalaimalar.com/h-upload/2023/10/08/1962800-7.webp)
தண்ணீரில் மூழ்கி மாயமான ஜெகநாதன்
டாஸ்மாக் பார் தொழிலாளி கதி என்ன? ேஜடர்பாளையம் காவிரி ஆற்றில் இன்று7-வது நாளாக தொடரும் தேடுதல் பணி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இழுத்துச் செல்லப்பட்டார்
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை ேஜடர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் பரிசல், மீன்பிடி படகு மூலமாக தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மாயமாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது.
இன்று 7-வது நாளாக தொடருகிறது
இன்றும் 7-வது நாளாக தொடர்ந்து காலை முதல் காவிரி ஆற்றில் மீண்டும் ஜெகநாதனை தேடி வருகின்றனர்.
7 நாட்கள் ஆகியும் ஜெகநாதனை கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஜெகநாதன் என்ன ஆனார்? என்பது குறித்து எந்த தடயங்களும் கிடைக்காததால் போலீசார் செய்வதறியாது உள்ளனர்.